10-3-22/ updated 12.33pm
இந்தியா : ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை எட்டுமணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பஞ்சாப் தவிர்த்து நான்குமாநிலங்களில் பிஜேபி முன்னிலை வகித்துவருகிறது.
உத்திரபிரதேசத்தில் ஆட்சியமைக்க தேவையான 202 இடங்களுக்கு கடும்போட்டி நிலவிவந்த நிலையில் பிஜேபி 264 இடங்களில் 11.30 மணியளவிலேயே முன்னிலை பெற்றுவருகிறது. இதனால் கர்மயோகி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் 4 இடத்திலும் சமாஜ்வாடி 126 இடங்களிலும் மூணுநிலைபெற்றிருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 6 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.
கோவாவில் மூன்றாம் முறையாக பிஜேபி ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியமைக்க 21 சீட்டுகள் தேவைப்படும் என்ற நிலையில் பிஜேபி 18 இடங்களிலும் காங்கிரஸ் 111 இடங்களிலும் GFP 1, MAG 5 மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை பெற்றுவருகிறது. சுயேச்சைகள் ஆட்சியமைக்க துருப்புசீட்டாக அமைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மீ மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இதுவரை எந்த ஒரு இடத்திலும் முன்னிலையில்லை என தெரிகிறது.
மணிப்பூர் மீண்டும் பிஜேபி வசம் செல்கிறது. மொத்தமுள்ள 60 இடங்களில் ஆட்சியமைக்க 31 சீட்டுக்கள் தேவைப்படுகிறது. பிஜேபி 25லும் காங்கிரஸ் 14 இடங்களிலும் என்.பி.பி.11 இடத்திலும் என்.டி.எப் 4 இடத்திலும் மற்றவை 4 இடத்திலும் முன்னிலை பெற்றிருக்கிறது.
உத்தர்காண்டில் மொத்தமுள்ள 70 இடங்களில் பிஜேபி 44 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 இடத்திலும் காங்கிரஸ் 22 இடத்திலும் மற்றவை 2 இடத்திலும் முன்னிலை பெற்றிருக்கின்றன. பஞ்சாப் ஆம் ஆத்மீ வசம் சென்றுவிட்டதாக தெரிகிறது. பிஜேபி 5 இடங்களில் முன்னிலைபெற்றிருக்க ஆம் ஆத்மீ 82 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 13 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.
தற்போதுவரை வெளிவந்துள்ள முன்னணி நிலவரத்தை கணக்கிட்டு பிஜேபி நான்கு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
update : கோவா : திரிணாமூல் 5 ஆம் ஆத்மி 1 முன்னிலை
தொடர்ந்து சட்டசபை தேர்தல்கள் முடிவை பெற இணைந்திருங்கள்https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen
