1-11-21/ 10.45
தமிழக அரசியலில் செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி இவர்கள் இருவரும் இருந்த வரையில் அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. திமுக அதிமுக என அடுத்தடுத்த அறிக்கைகள் குற்றசாட்டுகள் பறந்தவண்ணமிருக்கும். அதே பரபரப்பை அதைவிட மேலாக கிளப்பிக் கொண்டிருக்கிறார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை.
இவர் தொடுத்த அதிரடி தாக்குதலில் திமுக தலைமை ஆட்டம் கண்டது. விடாமல் பெருமை பேசிவந்த நிதியமைச்சர் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகிவிட்டார். மின்சாரத்துறை அமைச்சர் விழிபிதுங்கி நிற்கிறார். சேகர்பாபு அமைச்சரோ சரணடைந்துவிட்டார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஆவினில் மட்டுமே இனிப்புகள் வாங்கவேண்டும் என சொல்லும் அளவிற்கு அண்ணாமலை அவர்களின் அதிரடி இருக்கிறது.
இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி சென்றிருந்த திரு.அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். மேலும் ” தமிழக பிஜேபி தலைவர்களை உள்நோக்கத்தோடு கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கிறது. ஆனால் தமிழக பிஜேபி பெண்தலைவர்கள் கொடுத்த புகாரை கூட ஏற்க மறுக்கிறது. வழக்குகளும் பதியப்படவில்லை.
இந்த ஒருதலைபட்ச போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். நாளை நவம்பர் 2 அன்று தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக பிஜேபி பெண் தலைவர்கள் சார்பில் புகார் மனு அளிக்க இருக்கிறோம். பிஜேபி பெண் தலைவர்களை ஆபாசமாக பேசியவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை தயாராக இருக்கட்டும்.
டெல்லி சென்று நாங்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பார்த்துக் கொள்கிறோம்.” என கூறினார்.
இது திமுகவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது தேசிய பட்டியலின மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தில் புகார் இருப்பதும் அதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. இவர் பெயர் அண்ணாமலையா இல்லை ஆப்பா என பொதுமக்கள் நகைச்சுவையாக பேசி வருகின்றனர்.
…….உங்கள் பீமா
#பிஜேபி #அண்ணாமலை #தேசியமகளிர்ஆணையம் #dmk #mkstalin