02-02-2022/14.50pm
சென்னை : எழுபது வயதை நெருங்கினாலும் இன்னும் இளமையோ இளமையாக காட்சியளிக்கும் முதல்வரின் உடற்பயிற்சி காட்சி அவ்வப்போது வீடியோவாக வெளிவந்து மக்களை குஷிப்படுத்துவதுண்டு. காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது பொதுமக்களை சந்தித்து செல்பி எடுத்துக்கொள்வார். நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களிடம் பேச்சு கொடுப்பார்.


திடீரென இ.சி.ஆர்.சாலையில் விலையுயர்ந்த மிதிவண்டியில் ரோந்து செல்வார். அங்கு சைக்ளிங்க் வரும் இளசுகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சைக்கிளை மிதித்து ஆச்சர்யப்படுத்துவார். இப்படி தனது உடம்பை ஆரோக்கியமாக பேணி காப்பதில் கலைஞர் கருணாநிதியை மிஞ்சிவிட்டார் என திமுகவினரால் பாராட்டப்பட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால் அதே இ.சி.ஆர்.சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை தங்கள் குடியிருப்பு பகுதிகளை காப்பாற்ற கோரி பலவாரங்களாக தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதையெல்லாம் கடந்து செல்லும் முதல்வர் தனது மிதிவண்டியை மிதிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார் என பிஜேபியினர் விமர்சிக்கின்றனர்.


தொடர் சைக்கிளிங் வாக்கிங் ரெகுலர் எக்சர்சைஸ் என சினிமா கதாநாயகர்களுக்கே டப் கொடுக்கும் முதல்வர் முக ஸ்டாலின் இந்தியாவின் முதன்மையான முதல்வர் எண்டு சொன்னால் மிகையாகாது.
தமிழக மக்களின் பிரச்சினை குறித்து எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டாலும் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் முதல்வர் ஸ்டாலின் என திமுகவினர் புகழ்ந்து வருகின்றனர்.

….உங்கள் பீமா