15-11-21/ 11.05 am
சென்னை : தமிழகமெங்கும் பெய்த கனமழையால் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் அவதியுற்றனர். மேலும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. பயிர்காப்பீடு திட்டத்தை கோரிய விவசாயிகளுக்கு திமுக அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
மேலும் இதுகுறித்து பேச வந்த விவசாயி ஒருவரை திமுக அமைச்சர் நாசர் இழுத்து தள்ளிய கொடுமையும் நடந்தேறியது. முதல்வர் முக ஸ்டாலின் விவசாயநிலங்களை பார்வையிட சென்றபோது விவசாய நிலத்தில் முன்னேற்பாடாக சிமெண்ட் தரை அவசர அவசரமாக போடப்பட்டது. வெள்ளத்தால் சேதமடைந்த நிலங்களை பார்வையிட்ட முதல்வர் விவசாயிகளுக்கு இதுவரை எந்த ஒரு காப்பீடு திட்டமும் அறிவிக்கவில்லை என தெரிகிறது.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை வடலூர் கடலூர் உள்ளிட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மத்திய பிஜேபி அரசின் பிரதமர் பயிர்காப்பேடு திட்டத்தை எடுத்துக் கூறினார்.
ஏக்கருக்கு இருபதிமூணாயிரம் வீதம் மத்திய அரசு பயிர்க்காப்பீடு வழங்குவது குறித்து விளக்கமளித்தார்.இந்நிலையில் 15-11-21 இன்று PMFBY பிரதமர் பயிர்காப்பீட்டில் சேர கடைசிநாள் என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சம்பா விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இ சேவாவின் மூலமாக பயிர்காப்பீடு செய்து பயன்பெற வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் தோராயமாக 10 லட்சம் விவசாயிகள் 21 லட்சம் ஏக்கருக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்திருப்பதாக தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
…..உங்கள் பீமா