6-12-21/18.20pm
கேரளா ; இந்துக்களின் புனிதஸ்தலமான சபரிமலைக்கு செல்லவேண்டி இருமுடி கட்டி விரதம் இருந்து அய்யப்பனை காண கோடிக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கழுத்தில் மாலையிட்டிருந்த சிறுவர்களை அவமானப்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்தியாவில் பெரும்பான்மையின மக்களின் நம்பிக்கைகள் மதச்சார்பின்மை என்ற போர்வையிலும் லிபரலிசம் எனும் பெயரிலும் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இந்து விரோத போக்கு அதிகரித்து காணப்படுகிறது. கேரளா ஒரு மினி பாகிஸ்தானாக செயல்பட்டு வருவதாக பலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
சமீபத்தில் தடைசெய்யப்பட வேண்டிய SDPI அமைப்பை சேர்ந்த ஒருவர் 2040ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்போம் என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ் தொண்டரை கொன்ற ஜிஹாதிகளை பாராட்டி ஊர்வலம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸை ஒழிப்போம் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கழுத்தில் மாலையணிந்த சிறுவர்களை பள்ளிக்கு செல்லும் வழியில் மடக்கி “நான் ஒரு பாப்ரி” என்ற வாசகம் பொறித்த அட்டையை சிறுவர்களின் மேல்சட்டையில் ஒரு “மர்ம” கும்பல் அணிவித்தது. சிறுவர்கள் பயந்து போய் அந்த அட்டையை மாட்டிச் சென்றனர். அதில் சிலர் சபரிமலைக்கு மாலையணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
கேரளா ஒரு மினி பாகிஸ்தானாக மாறிவருகிறது என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என இந்து அமைப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
……உங்கள் பீமா