Thursday, March 28, 2024
Home > செய்திகள் > மெரிட்டல் ரேப் : ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பு குற்றவாளியா..? மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி

மெரிட்டல் ரேப் : ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பு குற்றவாளியா..? மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி

02-02-2022/16.40pm

டெல்லி : இன்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட பலகேள்விகளுக்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி திருமண பலாத்காரம் பற்றிய தனது பதில் விளக்கத்தை அளித்தார்.

ராஜ்யசபாவில் சிபிஐ (CPI)தலைவர்களுள் ஓஐவரான பினோய் விஸ்வாத் “குடும்ப வன்முறை சட்டப்பிரிவு 3 மற்றும் திருமண பலாத்காரம் தொடர்பான ஐபிசி 375 ஆகியவற்றை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்படுகிறதா” என கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்த அமைச்சர் ஸ்மிரிதி ” இந்த நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை திருமணம் என கண்டிப்பதும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவன் என கண்டிப்பதும் நல்லதல்ல.

`

ராஜ்யசபாவில் உள்ள நடைமுறைவிதி 47ன் படி துணை நீதித்துறையில் உள்ள ஒரு சட்டத்தை விவரிக்கவோ அல்லது விளக்கமளிக்கவோ முடியாது. மாநில அரசுகளுடன் சேர்ந்து இந்திய திருநாட்டின் பெண்களை பாதுகாப்பதே அரசின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஹெல்ப்லைன்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 66லட்சத்துக்கும் மேலான பெண்கள் பயனடைந்துள்ளனர். இதுதவிர 703 ஒன் ஸ்டாப் சென்டர்கள் ஐந்து லட்சத்திற்கும் மேலான பெண்களுக்கு உதவியுள்ளன.

```
```

நமது நாட்டில் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடைபெறும் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என கூறுவதும் ஆண்களை கற்பழிப்பு குற்றவாளி எனவும் கருத முடியாது” என மெரிட்டல் ரேப் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

….உங்கள் பீமா