Friday, February 7, 2025
Home > அரசியல் > கனிமொழி மட்டும் மிஸ்ஸிங்..! பொங்கல் பரிசு அறிவிப்பு..! கிண்டலடித்த அதிமுகவினர்..!

கனிமொழி மட்டும் மிஸ்ஸிங்..! பொங்கல் பரிசு அறிவிப்பு..! கிண்டலடித்த அதிமுகவினர்..!

18-11-21/ 6.40AM

சென்னை : திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ள பொங்கல் பரிசில் கனிமொழி புகைப்படம் மட்டும் மிஸ்ஸிங் என அதிமுகவினர் கிண்டலடித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசை அறிவித்துள்ளார். அதில் இத்தனை வருடங்களாக கொடுக்கப்பட்டு வந்த 2500 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகியவற்றை முதல்வர் கொடுக்க மறுத்துவிட்டார். இது குறித்து எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டன குரலை எழுப்பிவருகின்றன.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி “பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம்.

`

ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லைதற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

போதிய நிதி கஜானாவில்இல்லை என கூறும் திமுகவுக்கு மக்கள் வரிப்பணத்தில் பல கோடி செலவு செய்து நினைவு மண்டபம் எழுப்ப மட்டும் நிதியிருக்கிறதா சிலைகள் எழுப்ப நிதியிருக்கிறதா என அதிமுக மற்றும் பிஜேபியினர் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

```
```


……உங்கள் பீமா

FOR MORE ABOUT DMK NEWS https://www.facebook.com/The-Madras-Telegram-105718345112828/