Wednesday, May 20, 2026
Home > அரசியல் > அண்ணாமலை பஞ்ச்..! ஆடிப்போன உதயநிதி

அண்ணாமலை பஞ்ச்..! ஆடிப்போன உதயநிதி

23-4-22/16.48PM

சென்னை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை எதிர்கட்சியினரை விமர்சிப்பதில் தனக்கென ஒரு பாணியை வகுத்துவைத்துள்ளார். தமிழக திமுக அமைச்சர்கள் உட்பட சில அரசியல் கட்சித்தலைவர்கள் கூட சமீபகாலமாக அண்ணாமலையை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டுள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் ஏறுவதற்கு பதிலாக அருகே நின்றுகொண்டிருந்த உதயநிதிஸ்டாலினின் காரில் என்ற சென்றார். பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்துக்கூறியதும் மன்னிப்பு கேட்டுவிட்டு தனது காருக்கு சென்றார். இதை ஐநா கட்டப்பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு தமிழக ஊடகங்கள் பரபரப்பை கிளப்பியிருந்தன.

மேலும் உதயநிதியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்த கேள்வியெழுப்பினர். அதற்க்கு பதிலளித்த உதயநிதி “எடப்பாடி அவர்கள் எனது காரை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஆனால் கமலாலயம் பக்கம் மட்டும் செல்லக்கூடாது” என கூறியிருந்தார். இதற்க்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தனது பாணியில் உதயநிதியை விமர்சித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் ” உதயநிதி அவர்களின் கார் கமலாலயத்திற்கு வருவதற்கு அருகதையில்லை. கமலாலயத்திற்கு கார் வரவேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி இருக்கவேண்டும். வருவோர் போவோர் கார் எல்லாம் நாங்கள் அனுமதிப்பதில்லை. உதயநிதி அதுபோல ஒரு கார் வாங்கி அந்தமாதிரி அரசியல் செய்யும்போது மக்களுக்காக சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு களத்தில் மக்கள்பணி செய்யும்போது கமலாலயத்திற்கு வர அருகதை இருக்கும்.

அதுவரை கமலாலயம் வர தனது காரை எடுத்தால் சூப்பர்ஸ்டார் படத்தில் அவரது கார் லக்ஷ்மி ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிடும். அதேபோல உதயநிதியின் காரும் நின்றுவிடும். அதுக்குஒரு எதிக்ஸ் வேண்டும்.அதற்கேற்ற அரசியல் செய்யவேண்டும். கமலாலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் சுயமாக மக்கள் பணிசெய்து வந்த மக்கள்பணியாளர்கள். மூன்றாவது தலைமுறையாக ஐந்தாவது தலைமுறையாக பார்ன் வித் சில்வர் ஸ்பூன் போன்றவர்களுக்கெல்லாம் கமலாலயத்தில் இடம் கிடையாது” என விமர்சித்துள்ளார்.

…..உங்கள் பீமா