Tuesday, December 6, 2022
Home > செய்திகள் > உள்துறை அமைச்சகம் அதிரடி..! இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு மேலும் ஐந்தாண்டுகள் தடை நீட்டிப்பு..!

உள்துறை அமைச்சகம் அதிரடி..! இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு மேலும் ஐந்தாண்டுகள் தடை நீட்டிப்பு..!

18-11-21/ 5.50am

டெல்லி : இஸ்லாமிய ஆராய்ச்சியாளரான ஜாஹிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிய அறக்கட்டளைக்கு மேலும் ஐந்தாண்டுகள் தடை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய மத போதகர் என்று கூறிக்கொள்ளும் ஜாஹிர் நாயக்கின் பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் அவரது பிரிவை சேர்ந்த இளைஞர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட தூண்டும் வகையில் அமைந்திருந்தது. அதையடுத்து 2016 நவம்பர் 17 அன்று ஜாஹிர் நாயக்கின் அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுத்தது.

ஜாஹிரின் அமைப்பான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967ன் கீழ் ஒரு சட்ட விரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் ” இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது . மேலும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பை சீர்குலைக்கும் திறன் கொண்டது.” என தெரிவித்துள்ளது.

`

ஜாஹிர் பீஸ் டிவி பீஸ் டிவி உருது ஆகிய இரு ஊடகங்களை நடத்தி வருகிறார். இந்த ஊடகங்கள் இந்தியா பங்களாதேஷ் இலங்கை கனடா இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருக்கிறது.தேசிய புலனாய்வு அமைப்பான NIA விசாரணையை ஆரம்பிக்கும் போது ஜாஹிர் 2016ல் தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

……உங்கள் பீமா

for more details https://www.facebook.com/The-Madras-Telegram-105718345112828/