16-12-21/16.49pm
சென்னை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கரூர் ,மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திண்டுக்கல் சாலையில் விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு தனது காரில் திண்டுக்கல் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திமுகவை சேர்ந்த தமிழக கைத்தறி மற்றும் நெசவு அமைச்சர் காந்தி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பிஜேபி தலைவரா. யாரு அவன். அவனெல்லாம் ஒரு தலைவரா என ஒருமையில் சாடினார். இது பிஜேபியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வழக்கம் போல இதற்க்கு திமுகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிஜேபியினர் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ” திரைப்படம் எடுக்க கதை இல்லை என்றால் ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து திருடுவார்கள். அதே போல மத்திய மோடி அரசின் திட்டங்களை திமுக திருடி தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறது. என்னை யாரென்றே தெரியாது என சொல்லிய நண்பர் காந்தி அவரது பெயரையே நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சரான காந்தி காந்தி என பெயர்வைத்துக்கொண்டு கண்டதையும் வாந்தியெடுக்கிறார். 1994ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக இதே காந்தியை குண்டாசில் போட்டதை மறந்துவிட்டாரா. நிரூபர்கள் நீங்கள் அவரிடம் கேளுங்களேன் அவர் குண்டாசில் சென்றாரா கள்ளச்சாராயம் காய்ச்சினாரா என்று.
வெள்ளை வேஷ்ட்டி வெள்ளை சட்டை அணிந்தால் செய்த பழைய குற்றங்கள் மறந்துவிடுமா. இதுபோன்ற ஆட்கள் யாரை குறை சொல்லவேண்டும் என்றாலும் தகுதி வேண்டும். அந்த தகுதி அவருக்கு இல்லை” என பளிச்சென பதிலடி கொடுத்திருக்கிறார்.
….உங்கள் பீமா