Sunday, December 3, 2023
Home > செய்திகள் > மூடிமறைக்கப்பட்ட சிறுமியின் மர்ம மரணம்..!? உறவினர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ..?

மூடிமறைக்கப்பட்ட சிறுமியின் மர்ம மரணம்..!? உறவினர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ..?

கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே அமைந்துள்ளது பாச்சலூர் கிராமம். இங்கு பயின்று வந்த சிறுமி மர்மமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

கொடைக்கானல் வட்டம் பாச்சலூர் பகுதியில் அமைந்துள்ளது அரசுநடுநிலை பள்ளி. இங்கு கவிதா எனும் சிறுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 5ம் வகுப்பு பயின்று வந்தார். இவரது சகோதரி அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த திங்களன்று இருவரும் வழக்கம்போல பள்ளிக்கு சென்றிருக்கின்றனர். பள்ளியில் 11 மணி இடைவேளையின் கவிதாவை சகோதரி தேடியிருக்கிறார்.

பள்ளியில் தேடி கிடைக்காததால் ஆசிரியரிடம் சென்று முறையிட்டிருக்கிறார். வெளியில் போய் தேடு என ஆசிரியர் அறிவுறுத்தவே கவிதாவை தேடி வீட்டிற்க்கே சென்றுள்ளார். அங்கு தந்தை தாயிடம் விவரத்தை கூறவே அவர்கள் பதறியடித்துப்போய் பள்ளிக்கு விரைந்துள்ளனர். அங்கு தகவல்கள் சரிவர கிடைக்காமல் போகவே பள்ளி அருகே தேடியிருக்கின்றனர்.

அப்போது அங்கே அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கிட்டத்தட்ட முழுவதும் எறிந்த நிலையில் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த சிறுமியை பார்த்து கதறி அழுதனர். பள்ளியிலிருந்து சரியாக 20 அடி தொலைவிலேயே முட்புதர்களுக்குள் சிறுமி முட்புதர்களுக்குள் மீட்டெடுக்கப்பட்டார். பின்னர் விரைந்து ஒட்டன்சத்திரம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

`

சிறுமி கவிதாவின் கடைசி முனகலை கேட்டு மனமுடைந்த பெற்றோர்கள் தலையில் இடியாய் அவர்கள் மடியிலேயே கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். உடலோடு அங்கு பல மணிநேரம் காக்க வைத்த மருத்துவர்கள் பிறகு இங்கு உடற்கூறு சோதனை நடத்த முடியாது திண்டுக்கல் செல்லுங்கள் என அறிவுறுத்த உடைந்த மனதோடும் கண்களில் பூத்த நீரோடும் திண்டுக்கல் சென்றனர் அந்த சிறுமியின் குடும்பத்தினர்.

அங்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யும்வரை உடலை வாங்கமாட்டோம் என போராட பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ வான செந்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியதாக தெரிகிறது. அதேபோல காவல்துறையினரும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அப்பாவி பெற்றோர் கண்ணீரோடு நேற்று கவிதாவை நல்லடக்கம் செய்துள்ளனர்.

```
```

இந்த வழக்கு தொடர்பாக மூன்று ஆசிரியர்கள் விசாரணை வளையத்தில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக காவல்துறையினரிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சிறுமியின் உறவினர்கள் கொந்தளிக்கின்றனர்.

பெற்றோர்கள் கவனக்குறைவால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கே பொங்கி எழுந்த திமுக மற்றும் அதன் ஜோடி கட்சிகள் இந்த சிறுமியின் மரணத்தில் மௌனம் காப்பது ஏன் என பழனி வட்டார மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா

information of recieved in social media. madrastelegram dont own the authenticity. credit to: arunpandiyan bjp