Saturday, July 27, 2024
Home > அரசியல் > பிஜேபி காங்கிரஸ் படுதோல்வி..! மிரட்டிய மமதா பானெர்ஜி..!

பிஜேபி காங்கிரஸ் படுதோல்வி..! மிரட்டிய மமதா பானெர்ஜி..!

3-3-22/10.37AM

மேற்குவங்கம் : மேற்குவங்க நகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. 108 நகராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 102 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த நகராட்சிகளுக்கான தேர்தலில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் போட்டியிட்டன. கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன ஹாம்ரோ எனும் அமைப்பும் போட்டியிட்டது. இந்த கட்சி டார்ஜிலிங்கில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிஜேபி கம்யூனிஸ்ட் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரசை தோற்கடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுவேந்து அதிகாரியின் கோட்டையான காந்தியில் திரிணாமூல் காங்கிரஸ் அபார வெற்றபெற்றுள்ளது. பல இடங்களில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 27 நகராட்சிகளில் மமதாவின் திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து இடங்களையும் முழுவதுமாக வென்று பிஜேபிக்கு அதிர்ச்சியளித்துள்ளது. மேலும் நான்கு நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சுயேச்சைகளே வெகு இடத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

`

கடந்த சட்டமன்ற தேர்தலில் 77 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பிஜேபிக்கு இது பெரும் சறுக்கலை கொடுத்துள்ளது. 2021 தேர்தலையொட்டி நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை என்பதும், பிஜேபி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தாக்கப்பட்டதற்கு தலைமையில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன்காரணமாகவே பிஜேபி வாக்குவங்கி பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மேலும் நெட்டிசன் ஒருவர் குறிப்பிடுகையில் மேற்குவங்க பிஜேபி தொண்டராக இருப்பதை விட உக்ரைன் வாழ் இந்தியராக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார். இந்த தேர்தலில் 2171 வார்டுகளில் திரிணமூல் 1728 இடங்களிலும் பிஜேபி 65 இடங்களும் காங்கிரஸ் 57லிலும், இடதுசாரிகல் 56 இலும் மற்றவை 115 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

```
```

பிஜேபி வெற்றிபெற்றுள்ள 65 இடங்களிலும் இனி திரிணாமூல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தேர்தலுக்கு முன்னர் பிஜேபி வேட்பாளர்கள் முன்னாள் துணை மாநிலத்தலைவர் உட்பட பல எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா