Saturday, November 9, 2024
Home > செய்திகள் > மீண்டுமொரு உரி தாக்குதல்..? சுற்றி வளைத்த ராணுவ புலனாய்வு அமைப்பு..!

மீண்டுமொரு உரி தாக்குதல்..? சுற்றி வளைத்த ராணுவ புலனாய்வு அமைப்பு..!

16-12-21/18.05pm

மேற்கு வங்கம் : தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டு உரி தாக்குதல் போல மேற்கு வங்க ராணுவ முகாமை தகர்க்க முயன்ற இஸ்லாமியர் ஒருவரை ராணுவ புலனாய்வும் அமைப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு அமைப்பு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேற்கு வங்கம் மம்தாவின் ஆட்சியில் ரத்த பூமியாக மாறிவருகிறது. இந்துக்களின் கோவில்கள் தகர்க்கப்படுவது தொடர்ந்து இந்துக்கள் கொல்லப்படுவது என குற்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. மேலும் ரோஹிங்யா அகதிகள் மற்றும் அண்டை நாட்டு அகதிகள் ஊடுருவல் அல்லது அரசுக்கு தெரிந்தே அனுமதிப்பது என ஊடுருவல்காரர்களிள் அத்துமீறல் மேற்கு வங்கத்தில் அதிகரித்துள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச பிரஜைகள் ஒட்டு போட்ட கொடுமையும் நடந்தேறியிருக்கிறது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகள் இந்துக்களின் பெயரில் மறைந்து வாழ்ந்து தீவிரவாத செயலில் ஈடுபட முயன்றபோது பிடிபட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

`

இதையெல்லாம் கருத்தில் கொண்ட மத்திய அரசு எல்லையோர காவல்படையின் அதிகார வரம்பை ஐம்பது கிலோமீட்டராக அதிகரித்தது. இதற்க்கு மமதா கடும் கண்டனத்தை தெரிவித்தார். ஊடுருவல்காரர்களை வைத்து அரசியல் செய்யும் மம்தாவுக்கு இது பேரிடியாக அமைந்தது. இதோடு நில்லாமல் காவல்துறையினருக்கும் எல்லையோர காவல்படைக்கும் சிண்டு மூட்டும் வேலையை ஆரம்பித்துள்ளார். மக்களை வேறு எல்லையோர காவல்படையினர்க்கு எதிராக திசை திருப்பி வீட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகம் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் எல்லையோர காவல்படையின் அதிகாரத்தை நீட்டிக்காத மத்திய அரசு அஸ்ஸாம் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் உட்பட எல்லையோர மற்றும் தீவிரவாத ஊடுருவல் அதிகமுள்ள மாநிலங்களில் மட்டும் பி.எஸ்.எப் இன் அதிகார வரம்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராணுவத்திற்கு கிடைத்த உளவு செய்தியொன்று அனைவரையும் தூக்கிவாரிப்போட்டது. பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தில் வெடிகுண்டுகளை கடத்துகிறார்கள் என தகவல் கிடைத்ததும் ராணுவ புலனாய்வு அமைப்பினர் மற்றும் தீவிரவாத தடுப்பு போலீசார் SBSTC பேருந்தை பர்டவான் பகுதியில் திடீரென மடக்கினர். அந்த பேருந்தில் பயணம் செய்த மொஹம்மது சர்பாஸ் அன்சாரி என்பவனை மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.

```
```

அவனிடமிருந்து 30 நவீன ரக குண்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவன் கூறியதாக செய்திகள் தெரிவிப்பது என்னவெனில் மேற்குவங்கத்தில் உள்ள பனாகர்க் ராணுவ முகாமை அழிக்க திட்டமிட்டதாகவும் அதற்க்காக வெடிகுண்டுகளை கொண்டு சென்றதாகவும் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

“மேற்கு வங்கத்தில் சர்வாதிகார ஆட்சி செய்யும் மமதா இதுபோன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் அடுத்த மாநில தேர்தல்களில் கவனம் செலுத்துகிறார். இதுபோன்ற தீவிரவாத செயல்கள் அதிகரிப்பதாலேயே மத்திய அரசு எல்லைப்பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பை அதிகரித்துள்ளது” என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

…..உங்கள் பீமா