உத்திரபிரதேசத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அதிலும் காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய கட்சி போராட்டத்தால் ஆதாயம் தேட முயற்சிப்பது காலக்கொடுமை. நாங்கள்தான் போராட்டத்தை தூண்டுகிறோம் என பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உத்திரபிரதேச துணைமுதல்வர் என நினைத்து ஒரு ஆடம்பர காரை தாக்கிய போராட்டக்காரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த மையமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடி மக்களை போராட்டத்திற்கு இழுக்க காங்கிரஸ் போன்ற கட்சிகள் முயன்று வருகின்றன. இதனால் வன்முறை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர் என உத்திரபிரதேச பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட ப்ரியங்கா காந்தி மற்றும் எம்பி ஹூடா மற்றும் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் செல்ல முயன்றனர். அவர்களை கொரோனா விதிமுறைகளை பின்பற்றச்சொல்லி காவல்துறையினர் அறிவுறுத்த ப்ரியங்கா வதேரா பொங்கி எழுந்துவிட்டார்.
கடும்வார்த்தைகளால் காவல்துறையினரை தாக்கிப்பேச காவலர்கள் கைகட்டிக்கொண்டு நின்ற சம்பவம் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. ஆனாலும் காவல்துறையினர் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அத்துமீற முயன்ற பிரியங்கா கைது செய்யப்பட்டார்.
இந்நலயில் முதல்வர் யோகி கூறுகையில் ” சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராயிருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்” என குறிப்பிட்டுள்ளார்.
….உங்கள் பீமா
#lakhmipur #khera