Tuesday, June 17, 2025
Home > அரசியல் > பாஜக உள்ள வந்துரும்..! இணையத்தை கலக்கும் வீடியோ..!

பாஜக உள்ள வந்துரும்..! இணையத்தை கலக்கும் வீடியோ..!

16-2-22/15.30pm

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 அன்று தொடங்க உள்ள நிலையில் 17ம் தேதியோடுதேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளது. இந்த தேர்தலில் பாஜக திமுக நேரடி போட்டி நிலவிவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

இதனிடையே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் பாஜக வேட்பாளர்கள் பலர் மக்கள் சேவையில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது பாஜக தொண்டர்கள் அவர்களை கையும்களவுமாக போலீசாரிடம் பிடித்து கொடுத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

`

மேலும் சில இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாகவும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டதாகவும் பிஜேபியினர் விமர்சித்துவருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை மடிப்பாக்கம் நங்கநல்லூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

```
```

இதனிடையே பிஜேபி சார்பில் பிரச்சார வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் திமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். திமுகவின் தாரகமந்திரமான பாஜக உள்ளவந்துரும் என்ற சொல்லை மையமாக வைத்து வெளியாகியுள்ள அந்த வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

…..உங்கள் பீமா