Monday, July 6, 2026
Home > செய்திகள் > காவல்துறைக்கு சுதந்திரம் கொடுங்கள்..! விருதுநகரில் அண்ணாமலை..!

காவல்துறைக்கு சுதந்திரம் கொடுங்கள்..! விருதுநகரில் அண்ணாமலை..!

24-3-22/15.00pm

விருதுநகர் : கடந்த இருதினங்களுக்கு முன்னர் திமுக இளைஞரணி பிரமுகர் மற்றும் அவரது கூட்டாளிகளால் 22 வயதான தலித் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த கொடூரம் பத்து மாத காலமாக தொடர்ந்து அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பிஜேபி சார்பில் இன்று விருதுநகரில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தினார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் “கோயம்புத்தூரில் மூன்று வயது சிறுமி திமுகவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். வேலூரில் ஒரு பெண்மருதுவர் டெல்லி சம்பவம் போல பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்பட்டுள்ளார்.

விருதுநகரில் 22 வயது பெண் ஒருவர் பத்துமாத காலமாக தொடர்ந்து வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியே திமுக பிரமுகர் தான். பத்துமாத காலமாக காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கான்ஸ்டபிள் முதல் டிஐஜி வரை அனைவரும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
காவல்துறையை திமுக கட்டுப்படுத்திவருகிறது. அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

கடந்த ஜனவரியில் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் காவல்துறைக்கு என குழு ஒன்றை அமைத்தார் முதல்வர். ஆனால் அவரும் அவரது உதவியாளருமே தாக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் சம்பவத்தில் பிஜேபியின் தொடர் போராட்டங்களுக்கு பிறகே வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளார் முதல்வர். காவல்துறையை ஒழுங்குபடுத்த வந்த நீதியரசருக்கே இந்த நிலைமை என்றால் நம்மைப்போல சாதாரண மனிதர்களின் நிலைமை எப்படி இருக்கும்.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சகோதரிகளுக்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலாக தமிழக பிஜேபி ஒலிக்கும். சிபிசிஐடி நேர்மையாக விசாரித்து குற்றம் செய்தவர்கள் அதை அறிந்தவர்கள் தெரிந்தும் அமைதியாக இருந்தவர்கள் என அனைவரையும் கைது செய்யவேண்டும்.

https://fb.watch/bXZcpPpxMw/

பெண்கள் பாதுகாப்பு மாதம் என ஒதுக்கி 30 நாட்களும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை செயல்படவேண்டும் என பிஜேபி சார்பில் மிக பணிவாக கோரிக்கை வைக்கிறேன்” என கூறினார்.

…உங்கள் பீமா