2-11-21 / 13.55
பிரதமர் மோடிக்கு மக்களிடம் நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகிவருகிறது என்பது தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் உணர்த்தியது. அதே போல தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தமாக அனைத்து இடங்களையும் பிஜேபி மொத்தமாக சுருட்டி எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தமான செய்தியை பதிவு செய்திருக்கிறது.
அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபி அரசு மக்கள் பணியாற்றிவருகிறது. இங்கு கொசைகான் பபானிபூர் மரியானி மற்றும் தௌரா ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 74 சதவிகிதத்திற்கும் மேல் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.இந்த ஐந்து தொகுதிகளில் நேரடியாக பிஜேபியுடன் காங்கிரஸ் மூன்று இடத்தில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது.
மேலும் இரண்டு இடங்களில் பிஜேபி கூட்டணிக்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி லிபரல் (UPPL)இடம் காங்கிரஸ் தோற்றுப்போனது. அஸ்ஸாமில் காங்கிரஸ் மீதான மக்கள் மதிப்புகுரைந்து வருவதை இந்த இடைத்தேர்தல் உணர்த்துவதாக UPPL தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா அவர்களின் அதிரடி நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போதை மருந்து கடத்தல் மற்றும் விபசாரநோக்கில் பெண்கள் கடத்தப்படுத்தல் ஆகியவை தற்போது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.
பல பெண்கள் மீட்ட்கப்பட்டு மறுவாழ்வு முகாம் மற்றும் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மற்றும் போதைப்பொருள் மாபியாக்கள் பலர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வெற்றியை குறித்து முதல்வர் ஹிமந்தா தனது அதிகார பூர்வ இணையதளத்தில் மோடி மற்றும் ஜேபி நட்டா மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஐந்து தொகுதியிலும் பிஜேபி மற்றும் அதன் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் நல்லாட்சி குறித்த மக்களின் நம்பிக்கையே வாக்காக மாறியுள்ளது. வெற்றிபெற வழிகாட்டிய அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
……உங்கள் பீமா
#assam #bypoll #himanthabiswa #margin #victory