26-11-21/6.41AM
சென்னை : திமுக ஆட்சிக்கு வரும் முன்பிருந்தே அதன் தாரக மந்திரம் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்பதே. ஆனால் அதற்க்கான விளக்கம் இப்படி இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த சிலநாட்களில் பத்துக்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்கள் எழுந்துள்ளன. தி ஹென்காசியில் திமுக எம்பி தனுஷ் ஒரு விவசாய நிலத்தை ஆக்கிரமித்தார் என்று கூறப்பட்டு சம்மந்தப்பட்ட விவசாயி தற்கொலைக்கு முயன்ற பரபரப்பை ஏற்படுத்தினார். தென்காசி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை தனது பங்குக்கு இஸ்லாமியர் ஒருவரி நிலத்தை தனது பெயரில் போலி பாத்திரம் மூலமாக மாற்றிக்கொண்டதாக பாதிக்கப்பட்டவர் புகாரளித்தார்.
இந்நிலையில் மேலும் அதிரடியாக வாடகைக்கு விட்டவரின் நிலத்தையே திமுக பிரமுகர் சொந்தம் கொண்டாடிவருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வினோஜ் பி செல்வம் தனது ட்விட்டரில்” 2003 ஆம் ஆண்டு திமுக பிரமுகர் கதிர்வேல் என்பவர் தான் வசித்து வந்த வீட்டின் ஒரு அறையை திமுக கட்சி அலுவலகம் நடத்திக்கொள்ள மல்லூர், பேரூர் திமுக செயலாளர் சுரேந்திரனுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
தற்போது போலி பத்திரம் மூலம் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார் சுரேந்திரன். முதலமைச்சர் அவர்களிடம் சென்றால் கூட தன்னை ஒன்றும் செய்ய முடியாது. குடும்பத்தோடு கொளுத்தி விடுவோம் என மிரட்டுகிறாராம் சுரேந்திரன். என்னப்பா இப்படி இறங்கிட்டீங்க? 81 வயதுடைய மூத்த உறுப்பினருக்கே இந்த கதியா. நிலஅபகரிப்பு திமுக” என பதிவிட்டுள்ளார்.
…..உங்கள் பீமா