Saturday, July 27, 2024
Home > செய்திகள் > ஐநா பாராட்டும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் அடுத்த சிக்ஸர்..! ஜெருசலேம் போக வேண்டுமா டபுள் டைம் ஆபர்..!

ஐநா பாராட்டும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் அடுத்த சிக்ஸர்..! ஜெருசலேம் போக வேண்டுமா டபுள் டைம் ஆபர்..!

28-11-21/10.14am

சென்னை : ஐநா சபை தமிழக முதல்வர் ஸ்டாலினை பற்றி புகழ்ந்து பேசியதாக கலைஞர் தொலைக்காட்சி சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்தியாவின் முதன்மையான முதல்வர் முக ஸ்டாலின் என அறிவித்திருப்பதாக முக ஸ்டாலின் அவர்களே ஒரு மேடையில் ஜவஹர்லால் நேருவை போல தற்பெருமை பேசியிருந்தார். ஆனால் தற்போதைய தமிழக நிலவரம் திமுக அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது என பலதரப்பிலிருந்து விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழக நிதிச்சுமை அதிகரித்திருப்பதாகவும் மின்சாரத்துறை பணம் கொழிக்கும் டாஸ்மாக் மற்றும் போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகள் நஷ்டத்தில் இயங்குவதாக திமுக அரசு அறிவித்திருந்தது. மேலும் நிதிச்சுமையை காரணம் காட்டி அம்மா உணவாக ஊழியர்கள் 4000 பேரை பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

`

இதனிடையே தமிழகத்தில் இயங்கிவரும் அம்மா உணவகங்கள் நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி தற்காலிகமாக மூடியுள்ளது திமுக அரசு. இப்படி நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டிய திமுக பொழுது போக்கு பூங்கா நினைவிடம் தலைவர்களின் சிலைகள் என தேவையற்ற செலவுகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

```
```

இந்நிலையில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 24-11-21 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் “அனைத்து கிறித்தவ பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித தலமான ஜெருசலேம் சென்று வர அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் 37000திலிருந்து ரூ60000 ஆக உயர்த்தப்படுகிறது” என அறிவித்துள்ளது.

…..உங்கள் பீமா