Monday, December 2, 2024
Home > அரசியல் > காலியாகும் காயம்குளம் எம்.எல்.ஏ..? கொதிக்கும் பினராயி..!

காலியாகும் காயம்குளம் எம்.எல்.ஏ..? கொதிக்கும் பினராயி..!

28-2-22/14.49pm

கேரளா : ஆலப்புழா மாவட்டம் காயம்குளம் பகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரதிபா ஹரி. இவர் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இரண்டுமுறை வென்றுள்ளார். மேலும் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

இவர் கடந்த பிப்ரவரி 21 அன்று தனது சமூகவலைத்தளபக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் “2016 சட்டமன்ற தேர்தலில் நான் பெற்ற வாக்குகள் வித்தியாசம் 11,857 அதுவே 2021 தேர்தலில் 6298 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றியடைந்துள்ளேன். எனது வெற்றிக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள். அவர்களை விசாரிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இதுவரை மாநில தலைமை முயற்சிக்கவில்லை.

`

இது தொகுதியில் கட்சியின் வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது. மாவட்ட தலைமை சரிவர தேர்தல் பணியை செய்யவில்லை. என்னை வீழ்த்துவதே நோக்கம் என செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என பதிவிட்டிருந்தார். இதுகுறித்து பேசிய சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர். நாசர் ” இதுகுறித்து போதிய விளக்கம் கொடுக்குமாறு பிரதிபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.

```
```

மேலும் இவரது பதிவை 24 மணிநேரமாக நீக்கவில்லை என்பது மாநில தலைமையை கொந்தளிப்புக்குள்ளாகியிருக்கிற்றது. இதனிடையே காயம்குளம் பகுதி தேர்தல் குழு கமிட்டி ப்ரதிபாவின் குற்றசாட்டை மறுத்துள்ளது. தற்போதுவரை தகிழி பகுதி சிபிஎம் கமிட்டி உறுப்பினராக தொடர்ந்து வரும் பிரதிபா விளக்கம் கொடுக்கவில்லை எனில் கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் நீக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

…..உங்கள் பீமா