சென்னை : தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தமிழக எம்.எல்.ஏக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார். இதை தமிழக பிஜேபி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
தமிழக பிஜேபி துணைத்தலைவர் விபி.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” முதல்வர் ஸ்டாலின் கடிதம் வாயிலாக மட்டுமே போதைப்பொருட்களை ஒழித்துவிடமுடியாது. அதற்க்கு கடுமையான சட்டநடவடிக்கைகள் தேவை. முதல்வர் எழுதியுள்ள கடிதம் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையை விட அதிக நகைசுவை உடைய செய்தி.
ஒரு மாநிலத்தின் முதல்வர்,அதுவும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் துரையின் தலைவர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து காவல்துறைக்கு உத்தரவிடுவதை தவிர்த்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது நகைப்பை உண்டுபண்ணுகிறது. இதுபோல எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதும் முதல்வரை எங்காவது காண முடியுமா.
நான்குதிசைகளில் உள்ள மாநிலங்களில் இருந்து லாரிகளில் பஸ்கள் ரயில்கள் மூலம் போதைப்பொருட்கள் வருவது அனைவரும் அறிந்ததே. அதற்க்காக செயல்பட்டு வரும் ஏஜெண்டுகளை கண்டுபிடித்து கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக எம்.எல்.ஏக்களின் ஒத்துழைப்பை கோரியிருப்பது என்ன அர்த்தம் என விளங்கவில்லை.
மாறாக சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டுள்ளனரா என மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது” என அந்த அறிக்கையில் பிஜேபி துணைத்தலைவர் விபி.துரைசாமி தெரிவித்துள்ளார்.