மெக்ஸிகோ அதிபர் ( Andrés Manuel López Obrador ) இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி , போப் பிரான்சிஸ் , ஐநா பொது செயலாளர் அத்தாணியோ கடீரீஸ் ( António Guterres ) உள்ளிட்ட மூவரை உள்ளடக்கிய ஒரு குழுவை துவங்கவேண்டும் என்று கூறிய அவர் இது தொடர்பான கோரிக்கையை ஐநா சபைக்கும் அனுப்பியுள்ளார் .

இப்போது ரஸ்சியா உக்ரைன் இடையே நடந்துவரும் போர் , மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நிலையற்ற பதற்றமான சூழல் காரணமாக உலக அமைதி பாதிக்கப்பட்டுள்ளது . மேலும் இது பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இதனால் பிரதமர் மோடி , போப் பிரான்சிஸ் ஐநா பொது செயலாளர் உள்ளிட்ட மூவரும் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் . அந்த குழு அணைத்து நாடுகளுடனும் கலந்தாலோசித்து உலகம் முழுவதும் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டும் .

மேலும் இந்த காலகட்டத்தில் அணைத்து நாடுகளும் தங்களுக்குள் ஒற்றுமையாக செயல்பட்டு பொருளாதாரத்தை மேப்பாடுத்த வேண்டும் . இது நடந்தால் உலக பொருளாதாரம் நன்றாக இருக்கும் . மேலும் இது பொருளாதார ரீதியாக மோசமாக உள்ள பல நாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் . மேலும் இது தொடர்பான கோப்புகள் மற்றும் இந்த பரிந்துரையை தான் ஐநா சபைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார் . ஒரு உலக தலைவர் இந்திய பிரதமர் மோடி மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளதை பலரும் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.