Thursday, March 28, 2024
Home > அரசியல் > தமிழக முதலமைச்சரை விமர்சித்த ஜேபி நட்டா..!

தமிழக முதலமைச்சரை விமர்சித்த ஜேபி நட்டா..!

18-4-22/13.13PM

புதுதில்லி : எதிர்க்கட்சிகள் நமது தேசத்தின் ஆன்மாவின் மீது நேரடி தாக்குதலில் ஈடுபடுகின்றன. கடின உழைப்பாளிகளான நமது குடிமக்கள் மீது அவநம்பிக்கையை விதைக்கின்றன என கூறியுள்ளார்.

பிஜேபி தேசிய செயலாளர் ஜேபி.நட்டா எழுதியுள்ள கடிதத்தில் ” எதிர்க்கட்சிகள் சோதித்து பார்த்தன. முயற்சி செய்தன. வாக்கு வங்கி அரசியல் பிரித்தாளும் அரசியல் போன்ற துருப்பிடித்த எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியர்கள் அதிகாரம் பெற்றிருப்பதையும் சிறகுகள் விரிந்திருப்பதையும் உலகநாடுகள் கண்டுள்ளது.

துரதிர்ஷ்டாவசமாக இந்த வளர்ச்சி அரசியலை நோக்கிய இந்த பயணத்தை மக்களால் ஒதுக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட கட்சிகள் யாவும் இந்த வளர்ச்சியை எதிர்க்கின்றன. அவை மீண்டும் பிரிவினைவாத அரசியலில் தஞ்சமடைந்துள்ளன. இன்று இந்தியா இரண்டு தனித்துவமான அரசியலை பார்க்கிறது. இந்த நிராகரிக்கப்பட்ட கட்சிகள் அறிக்கைகளில் ஒன்றுகூடுவதை சமீபநாட்களாக காண்கிறோம்.

`

அவர்கள் நமது தேசத்தின் ஆன்மாவின் மீது நேரடித்தாக்குதலை நடத்தி மக்கள் மீது அவநம்பிக்கையை திணிக்க முயல்கின்றனர். நம் தேசத்தின் இளைஞர்கள் வாய்ப்புக்கான தடைகளை அல்ல நாட்டின் வளர்ச்சியை விரும்புகிறார்கள். இளைஞர்கள் மதவேறுபாடுகளை மறந்து பல்வேறு தரப்புமக்களும் ஒன்றிணைந்து வறுமையை முறியடித்துள்ளனர். இந்தியாவை முன்னேற்றத்தின் புதிய உச்சிக்கு கொண்டுசென்றுள்ளனர்.

```
```

எதிர்க்கட்சிகள் தங்களது பாதையை மாற்றி வளர்ச்சி அரசியலை தழுவ முன்வர வேண்டும்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் மேற்குவங்க முதல்வர் மமதா உள்ளிட்டோர் ராஜஸ்தான் மற்றும் சிலமாநிலங்களில் சிறுபான்மையினரால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தை கண்டிக்காமல் அவர்களை கைது செய்ததை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்க்கு பதிலடியாக பிஜேபி தேசிய செயலாளர் ஜேபி நட்டா இந்த பதிலறிக்கையை கடிதமாக வெளியிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா