Friday, February 23, 2024
Home > அரசியல் > உத்திரபிரதேச தேர்தல் 2022 : அவர்கள் ஏழை மக்கள் காலடியில் கிடப்பதையே விரும்புகிறார்கள்..! பிரதமர் மோடி

உத்திரபிரதேச தேர்தல் 2022 : அவர்கள் ஏழை மக்கள் காலடியில் கிடப்பதையே விரும்புகிறார்கள்..! பிரதமர் மோடி

23-2-22/16.30pm

உத்திரபிரதேசம் : உதிர்ப்பிரதேச மாநிலத்தில் நான்காவது கட்டமாக இன்று 59 தொகுதிக்கு நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் மிக முக்கியமான வேட்பாளர்கள் இந்த தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்கள்.

மாநில சட்ட அமைச்சர் பிரிஜேஷ் பதக், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சுரேந்திர சிங் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். மேலும் மதியம் 3 மணிவரை 43 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே பார்பங்கி பேரணியில் பிரதமர் மக்களிடையே உரையாற்றினார். அதில் எதிர்க்கட்சிகள் பெயரை குறிப்பிடாமல் காட்டமாக விமர்சித்தார். வழக்கம்போல அவரது பேச்சில் நக்கல் தூக்கலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

” இன்று வாக்குசாவடிகளில் நீண்ட நெடிய வரிசை இருந்ததை கண்டேன். மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.இந்த இரட்டை இன்ஜின் அரசு மீண்டும் மக்களுக்கு தேவைப்படுகிறது. பிஜேபி அரசு கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் கரும்பு ஆலையின் தரத்தை மாட்டு உயர்த்தவில்லை. எத்தனால் எடுப்பதன் மூலம் கரும்பு விவசாயிகளின் பொருளாதாராத்தை உயர்த்தியுள்ளோம்.

`

மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக 800 கோடி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. பார்பங்கி பகுதியில் உள்ள ஐந்துலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு விவசாயிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். முந்தைய ஆள்குடி அரசு ஏழை மக்களை தங்களது காலடியில் கிடக்க வேண்டும் என்கிற மனப்பான்மையுடனேயே நடந்துகொண்டார்கள்.

```
```

பிஜேபி அரசு கோடிக்கணக்கான குறுவிவசாயிகளின் தேவைகளை உணர்ந்து அவர்களின் தேவைகளை பிஎம். கிசான் சம்மான் நிதி மூலம் நிறைவேற்றியிருக்கிறது. 2017 உடன் ஒப்பிட்டு பார்த்தால் உதிர்ப்பிரதேசத்தின் வளர்ச்சியில் இந்த இரட்டை இன்ஜின் அரசின் செயல்பாடுகள் வளர்ச்சிப்பாதையில் மாநிலத்தை கொண்டுசெலுத்துவது தெரியும்” என குறிப்பிட்டார்.

……உங்கள் பீமா