16-2-22/10.45am
மேற்குவங்கம் : தமிழகத்தில் முக ஸ்டாலினுக்கு சபரீசன் எவ்வளவு முக்கியமானவரோ அதே போல மமதாவுக்கு அபிஷேக் பானர்ஜி மிக முக்கியமானவர். சமீபநாட்களாக இருவருக்குள்ளும் மோதல்போக்கு முற்றிவருவதாக மேற்குவங்க செய்தி நிறுவனங்கள் செய்திவெளியிட்டு வந்தன.

அந்த செய்தியை நிரூபிப்பது போல அபிஷேக் பானர்ஜி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ஒரு நபர் ஒரு பதவி என்ற முழக்கத்தை வெளியிட்டிருந்தார். அதையடுத்து சலசலப்பு கிளம்பியது. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கோரியபோது அது ஐ பேக் நிறுவனத்தின் வேலை.எனக்கும் அதற்கும் துளியும் தொடர்புல்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் திரிணமூல் காங்கிரசில் உச்சகட்ட உட்கட்சிப்பூசல் நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மூத்த திரிணமூல் அமைச்சர் ஹக்கீம் மற்றும் பட்டாச்சார்யா போன்றவர்களின் சமூக வலைத்தளங்கள் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு இளைய தலைமுறையினரை பதவிகொடுத்து கட்சிக்கு புத்துணர்ச்சியூட்ட பிரசாந்த் கிஷோர் மமதாவுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி மூத்த தலைவர்களுடன் மமதா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தை அபிஷேக் பானெர்ஜி புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மமதாவின் இந்த செயல்களுக்கெல்லாம் மூளையாக செயல்பட்டு வருவது பிரசாந்த் கிஷோர் எனவும் பிஜேபியின் பி டீம் போல செயல்பட்டு திரிணாமூல் காங்கிரசில் உட்கட்சி பூசல் ஏற்படுத்த பி.கே முயல்வதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
….உங்கள் பீமா