Saturday, July 27, 2024
Home > செய்திகள் > ஹிஜாப் : தேர்வெழுத அனுமதி மறுத்த ஆசிரியர்கள்..! வைரலாகும் வீடியோ..!

ஹிஜாப் : தேர்வெழுத அனுமதி மறுத்த ஆசிரியர்கள்..! வைரலாகும் வீடியோ..!

14-2-22/16.30pm

கர்நாடகா : கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள அரசுக்கல்லூரியில் இத்தனை வருடங்கள் இல்லாத பழக்கமாக சில மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தனர். அவர்களை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தவே மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நாளில் இஸ்லாமிய அமைப்புகள் பல போர்க்கொடி தூக்கியதோடு மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும்அதன் நிர்வாகிகளை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அடுத்த நாளே நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கும் போடப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே இது ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. உலகமெங்கும் இதை ஒரு ஒடுக்குமுறையாக காண்பிக்க எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் தீவிரமாய் இறங்கின.

`

இந்நிலையில் கர்நாடகா மாண்டியா பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பப்பட்டனர்.

```
```

அந்த சிறுமிகள் கூடவே ஒரு வீடியோ கிராபரும் படமெடுக்க வந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹிஜாப் பிரச்சினையை பூதாகாரமாக்கி தங்களது அரசியல் லாபத்திற்காக அப்பாவி சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் பலிக்கடாவாக்குகின்றன என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா