Saturday, May 2, 2026
Home > செய்திகள் > டெல்லியில் பரபரப்பு..! அஜித் தோவல் பங்களாவுக்குள் நுழைய முயன்ற மர்மநபர்..!

டெல்லியில் பரபரப்பு..! அஜித் தோவல் பங்களாவுக்குள் நுழைய முயன்ற மர்மநபர்..!

16-2-22/12.00PM

புதுடெல்லி : இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் குமார் தோவல். இவரது இல்லம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இவரது வீட்டிற்குள் நுழைய முயன்ற மர்மநபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சற்று நேரத்திற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் பங்களாவிற்குள் மர்மநபர் ஒருவர் காரில் நுழைய முயன்றார். சந்தேகத்துக்குரிய வகையில் நுழைந்த அவரை தடுத்து நிறுத்திய போலீசார் கேள்வியெழுப்ப முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதையடுத்து அவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

மேலும் சந்தேகத்துக்குரிய அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டதாக தெரிகிறது. விசாரணையில் அந்தநபர் வாடகை கார் ஒன்றை எடுத்து அஜித் தோவல் பங்காளவிற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே குறும்பு பிடித்த நெட்டிசன் ஒருவர் பிரபல அரசியல்வாதி ஒருவர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் ஒருவேளை இவராயிருக்குமோ என குசும்பாக கேள்வியெழுப்பியுள்ளார். அந்த அரசியல்வாதியை பெண்போல சித்தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா