Thursday, May 21, 2026
Home > அரசியல் > எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றம்..!? புலம்பும் காங்கிரஸ்..!

எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றம்..!? புலம்பும் காங்கிரஸ்..!

இந்தியா : மஹாராஷ்டிரா மாநில சிவசேனா எம்பியான சஞ்சய் ராவத் நிதிமுறைகேடு செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அவரை கைதுசெய்துள்ளது. மேலும் நிதிமுறைகேட்டில் ஈடுபட்ட பல முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.



இந்நிலையில் எம்பியான சசிதரூர் சஞ்சய் கைதை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்திநிறுவனத்திடம் பேசிய தரூர் ” மத்திய பிஜேபி அரசால் அமலாக்கத்துறை தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. அரசு சார்ந்த நிறுவனங்கள் அரசியல் நோக்கங்களுக்கானவை இல்லை. அந்த நிறுவனங்கள் தமது கடமைகளை மட்டுமே செய்யவேண்டும்.

FOR BUSINESS LISTING http://www.tsimart.com

ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் நீங்கள் எதிர்கட்சியினரை குறிவைத்துள்ளீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா ஜனநாயக மதிப்பு மிக்க நாடு என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்” என மத்திய அரசை தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.



மேலும் நாடாளுமன்ற எதிர்காட்சகி தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில் ” பிஜேபி எதிர்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை அமைக்க விரும்புகிறது. அதன் முதல்படிதான் சஞ்சய் மீதான கைது நடவடிக்கை” என விமர்சித்துள்ளார். ஆனால் நேற்று சஞ்சய் ராவத்திற்கு சொந்தமான மும்பையில் உள்ள பங்களாவில் அமலாக்கத்துறை கணக்கில் வராத சில லட்சங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.