19-2-22/7.00am
சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற உள்ளநிலையில் நேற்று முன்தினத்தோடு பிரச்சாரங்கள் ஓய்வுபெற்றன. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போலல்லாமல் இந்தமுறை கடினமான போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். தனது வேட்பாளர்கள் 60 பேரை திமுக கடத்திவிட்டதாக செய்தியாளர்களிடம் குற்றசாட்டை முன்வைத்தார். அதே போல பாமக வேட்பாளர் ஒருவரை திமுக கடத்தியதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பிஜேபி வேட்பாளர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டும் அவர்களது அலுவலகம் சூறையாடப்பட்டதாகவும் கமலாலய வட்டாரங்கள் புகார் எழுப்பின.
இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு மக்களுக்கு கொடுத்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் தமிழக அரசு வழங்கிய மஞ்சப்பை 65 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும் அதிலும் ஊழல் நடந்திருப்பதாகவும் பிஜேபி பகீர் குற்றசாட்டை எழுப்பியுள்ளது. 10 ரூபாய் பெருமான பைக்கு ஏன் 65 ரூபாய்க்கு டெண்டர் விடவேண்டும் என மக்கள் கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுமக்களிடம் 65 ரூபாய்க்கு மஞ்சப்பை வாங்குவீர்களா என கேட்டதற்கு 10 ரூபாய் பையை நாங்கள் ஏன் 65ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும் என கேள்வியெழுப்பினர்.
….உங்கள் பீமா