8-11-21/ 6.35am
சென்னை; நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி முதல்வர் ஆய்வுமேற்கொண்டதை சுட்டிக்காட்டி ஓய்வறியா முதலமைச்சர் என குறிப்பிட்டிருந்தது. இதை நக்கலடித்து சுமந்த் ராமன் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் புகுந்த தோழர்கள் சாதியை குறிப்பிட்டது அவர்களது நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சென்னையில் பெய்து வரும் தொடர்மழையால் நகரமே வெள்ளக்காடானது நேற்று முன்தினம் ஆரம்பித்த மழை தற்போதுவரை விடாமல் பெய்துவருகிறது. நேற்று சில இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதை குறிப்பிட்ட நியூஸ் 7 ” ஓய்வறியா முதலமைச்சர்” என தலைப்பிட்டிருந்தது.
இதற்க்கு பதிலளித்த சுமந்த் ராமன் “கலைஞர் டிவி போடவேண்டிய தலைப்பை நியூஸ் 7 போட்டிருக்கிறது” என பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவில் புகுந்த கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் “சங்கி ஒன்றை எதிர்த்தா அது பொதுச் சமூகத்திற்கு நன்மை விளைவிப்பதாக இருக்கும்” என குறிப்பிட்டார்.
இந்த தோழருக்கு பதிலளித்த சுமந்த் ” இந்த வருஷம் திமுக கிட்ட வாங்கின கலெக்சன் எவ்ளோ சார். 25 கோடி கலியாயிருச்சா” என கேட்க, பொங்கியெழுந்த கம்யூனிஸ்ட் தோழர் “ஆமாம் சார். அவங்க கொடுத்தத அந்த தேர்தல்ல அவங்க கட்சி ஆட்களுக்கே செலவு பன்ன கொடுத்துட்டோம். உங்க பேமண்ட் எவ்வளவு சார்?
பயங்கரமா வாயை வாடகைக்கு விடுறீங்க..
உங்க மனைவி நீதிபதினு கேள்வி பட்டேன். அவங்க கூட பிரமணர் சங்க மாநாட்டில் கலந்துகிட்டதா சொல்றாங்க உண்மையா சார்?” என சாதியை குறிப்பிட்டு உள்நோக்கத்தோடு பதிலளித்தார். இதற்க்கு தக்க பதிலடி கொடுத்த சுமந்த் ராமன் “நான் என்னை அடமானம் வைப்பதில்லை. கார்போரேட் ஒழிகனு கோஷம் போட்டுட்டு அந்த கார்போரேட் பணத்தையே திமுக வழியா வாங்குறீங்களே!! 1% ஒட்டு கட்சி ஏன் ஆனீங்கன்னு புரியுது.” என குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் மற்றும் விசிக திமுக போன்ற கட்சிகளின் ஆதரவாளர்கள் கருத்து கூற முடியவில்லை எனில் எடுக்கும் ஒரே ஆயுதம் சாதி தான் என நடுநிலையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
…….உங்கள் பீமா