Friday, February 23, 2024
Home > அரசியல் > பிஜேபி மாநில தலைவர் கைது..! போலீசார் அட்டூழியம்..!

பிஜேபி மாநில தலைவர் கைது..! போலீசார் அட்டூழியம்..!

3-01-22/8.10am

ஹைதராபாத் : பிஜேபி மாநில தலைவர் பண்டி சஞ்சய்குமார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் தனது அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இருந்த போது போலீசார் அத்துமீறி நுழைந்து கைது செய்தனர். மேலும் அவரது கழுத்தை பிடித்து இழுத்த கொடூரமும் நடந்தேறியது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தெலுங்கானா அரசு எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி தடாலடியாக இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து பிஜேபி மாநில தலைவரும் கரீம்நகர் எம்பியுமான பண்டி சஞ்சய்குமார் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

`

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அலுவலகத்தில் ஆசிரியர்கள் மற்றும் தொண்டர்களுடன் போராட்டம் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு போலீசார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டதாக தெரிகிறது. போலீசாரை உள்ளே வரவிடாமல் தடுக்க அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டன. ஆனால் போலீசார் வாயு குண்டுகளை உள்ளே வீசினர். மேலும் இரும்பு கேட்டுகளை கேஸ் கட்டர்களை கொண்டு தகர்த்தனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இருந்த பலபெண்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

```
```

அத்துமீறி நுழைந்த போலீசார் பண்டி சஞ்சயின் கழுத்தில் உள்ள துண்டை பிடித்து இழுத்து சென்றனர். மேலும் மனக்கொண்டூர் காவல்நிலையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். போலீசார் இதுகுறித்து தெரிவிக்கையில் கொரோனா விதிமீறல் இருப்பதால் கைது செய்துள்ளோம் என கூறுகின்றனர். சமீபத்தில் பண்டி நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கு கொண்டு மாநில அரசின் சர்வாதிகாரப்போக்கிற்கு எதிராக குரல்கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக தெலுங்கானாவில் பிஜேபியின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா