27-12-21/20.39pm
டெல்லி : மத்திய அரசு மறைந்த சமூக ஆர்வலர் மற்றும் கிறித்தவ மிஷனரி தலைவர்களுள் ஒருவரான தெரேசா அவர்களின் வங்கிக்கணக்கு அனைத்தையும் முடக்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி காட்டுத்தீயாய் பரவியது.
இந்த வதந்தியை நம்பி பிஜேபி அரசை குறை சொன்ன தலைவர்கள் ஏராளம். மக்களிடம் பிரிவினையை உண்டுபண்ணும் உள்நோக்கத்தில் சமூக பொறுப்புள்ள அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர்களே இப்படி வதந்தியை கிளப்பி மத்திய பிஜேபி அரசின் மீது பழி போட முயன்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
இந்த தவறான உள்நோக்கத்தோடு கூடிய வதந்தியை முதலில் கிளப்பியவர் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி என தெரியவந்துள்ளது. அவர் தனது ட்வீட் ஒன்றில் ” இந்த கிறிஸ்துமஸில் அன்னை தெரேசாவின் மிஷனரிக்கு சொந்தமான அனைத்து வங்கிக்கணக்கையும் மத்திய அரசு முடக்கியிருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். அவர்களின் 22000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் தவிக்கவிடப்பட்டுள்ளார்கள்” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர் இதே பதிவை வார்த்தை மாறாமல் குறிப்பிட்டு மத்திய அரசை சாடியுள்ளார். நம்ம ஊரு கம்யூனிஸ்டான அருணன் கதிரேசன் மனுவாதம் சங்கி என ஏளனமாக குறிப்பிட்டு பிஜேபியை சாடியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டங்களையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்த்து எதிர்ப்பு தெரிவிக்காமல் அரசியல் லாபத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் இதைப்போன்ற பிரிவினை சக்திகளிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று மாலை இதுகுறித்த விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் ” மிஷனரிஸ் ஆப் சேரிட்டி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை தொடர்பு கொண்டு தங்களது அனைத்து வாங்கிக்கணக்குகளையும் முடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும்மிஷனரி தரப்பில் FCRA புதுப்பிக்கும்படி எந்த ஒரு விண்ணப்பமும் வரவில்லை” என குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு எந்த ஒரு கணக்கையும் முடக்கவில்லை என்பதை தனது விளக்க கடிதத்தில் தெளிவாக அறிவித்துள்ளது. ஆனாலும் மத்திய அரசின் மீது பழிபோடுவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாய் இருக்கின்றன என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா