Saturday, July 27, 2024
Home > செய்திகள் > டெல்லியில் கொடுமை..!? ISKCON தொண்டர்களுக்கு நேர்ந்த கதி..!

டெல்லியில் கொடுமை..!? ISKCON தொண்டர்களுக்கு நேர்ந்த கதி..!

27-12-21/16.02pm

டெல்லி : ISKCON தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதே நாளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பல இடங்களில் கூடிய கூட்டத்தை போலீசார் கண்டுகொள்ளாமல் துறவிகளுக்கு அபராதம் விதித்ததை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் டெல்லி கனாட் பிளேஸில் ISKCON தொண்டர்கள் ஹரிநாமம் பாடிக்கொண்டு பகவத்கீதை பிரதிகளை வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த பகவத்கீதையின் பிரதிகளை பறிமுதல் செய்துள்ளனர். iskcon தொண்டர் ஒருவர் இதுகுறித்து கேள்வியெழுப்பினார்.

`

அதற்க்கு பதிலளித்த போலீஸ் இது கொரோனா காலம் என்பதால் கூட்டம் கூட அனுமதிக்க முடியாது என கூற தொண்டர்கள் இங்கு மக்கள் கூடவில்லையே என கேட்டிருக்கின்றனர். இதனால் கொந்தளித்த காவல்துறை நீங்கள் பாடினால் கூட்டம் சேரும் அதனால் தான் நிறுத்த சொல்கிறோம் என கூறி தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

```
```

டெல்லியின் ஒவ்வொரு பகுதியிலும் சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் நாள்களிலும் அதே நாளன்று முக கவசம் கூட அணியாமல் மக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா