Friday, April 18, 2025
Home > செய்திகள் > விபரீதமாய் போன கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..? கேரள போலீசார் மீது கடும் தாக்குதல்..! வில்லங்க பின்னணி..!

விபரீதமாய் போன கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..? கேரள போலீசார் மீது கடும் தாக்குதல்..! வில்லங்க பின்னணி..!

27-12-21/ 18.25pm

கேரளா : கடந்த 25 இரவு கேரள கிழக்கம்பளத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இரு பிரிவனருக்கிடையே பெரும் மோதலை தூண்டியுள்ளது. அதையடுத்து நடந்த கலவரத்தில் போலீசார் கடுமையாக தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளா மாநிலம் கொச்சி அருகே கிழக்கம்பலம் பகுதியில் அமைந்துள்ளது கிட்டெக்ஸ் எனும் குழந்தைகள் ஆடை தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் ஏற்கனவே பினராயி விஜயனின் அரசியல் அழுத்தத்தால் வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நிறுவனத்தின் குடியிருப்பில் தங்கியுள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அதே குடியிருப்பில் உள்ள இன்னொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரிவினர் கொண்டாட்டத்தை எதிர்த்து குரல்கொடுக்கவே கலவரம் மூண்டிருக்கிறது. தடுக்க வந்த காவல்துறையினர் ஐந்து பேர் தாக்கப்பட்டதாகவும் போலீஸ் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆலுவா எஸ்பி கார்த்திக் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 162 பேரை கைதுசெய்துள்ளனர்.

`

அவர்களிடம் போலீசை தாக்கியது யார் என நடத்திய விசாரணையில் காவல்துறையினரை தாக்கிய 24 பேரை மட்டும் நேற்று காவல்துறை கைதுசெய்துள்ளது. குன்னத்த நாடு சிஐ ஷாஜன் மற்றும் அவருடன் இருந்த ஐந்து காவலர்கள் தாக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய கிட்டெக்ஸ் சேர்மன் சாபு எம் ஜேக்கப் கூறுகையில் ” அவர்களுக்கு யாரோ வலிந்து போதை தரும் பொருளை கொடுத்திருக்கலாம்.

```
```

இது திட்டமிடப்பட்ட கலவரம் இல்லை. தற்செயலாக நடந்த விபரீதம்” என விளக்கமளித்துள்ளார். இந்த விஷயத்தை கேரள அரசு விடுவதாயில்லை. ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நிலவும் நிலையில் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என தொழில் முனைவோர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

……உங்கள் பீமா