24-1-22/10.20am
சென்னை: கட்டாயமதமாற்றத்தால் உயிரிழந்த அரியலூர் மாணவியின் இறப்பில் பிஜேபி அரசியல் செய்வதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சிகளுக்கு பதிலளித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை “இறந்தவர் சடலத்தை வைத்துக் கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து மக்களைத் திசைதிருப்பும் எண்ணம் தமிழக பிஜேபிக்கு இல்லை.
எங்களது கோரிக்கைகள் இவையே.
மாணவி லாவண்யாவின் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய ராகேல் மேரி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
….உங்கள் பீமா