17-3-22/14.40pm
ஆந்திரா : ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 18 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதுகுறித்து கேள்வியெழுப்பிய எம்.எல்.ஏக்களை கடிந்து கொண்டதுடன் அவைநீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் 12 அன்று மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பளமேட்டா, ஹரிஜனபெட்டா, கேசனப்பள்ளிவாரி,கௌரிசங்கர்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 18பேர் திடீரென தலைசுற்றல் வாந்தி மயக்கம் என தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்தனர்.

மேலும் இவர்களது இறப்புக்கு கூச் என அழைக்கப்படும் மதுவகை காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த எந்த ஒரு தெளிவான விளக்கமும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினர் கேள்வியெழுப்பினர். இதையடுத்து முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி வெளிப்படையாக எரிச்சலடைந்தார்.

அதோடு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை திட்டி தீர்த்தார். நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள் என கண்டிப்பு மிகுந்த குரலில் கூறினார். அதையடுத்து சட்டப்பேரவை அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் தெலுங்குதேசம் சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.குரல்வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஏற்கனவே மூன்று எம்.எல்.ஏக்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெகன்மோகன் சர்வாதிகாரப்போக்குடன் நடந்துகொள்வதாக தெலுங்குதேசம் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா
