14-12-21/15.47pm
இந்தியா : இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி வாரணாசியில் காசி விஸ்வநாத் காரிடாரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உரையாற்றினார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பிரதமரின் வாரணாசி பயணத்தை பற்றி குறிப்பிடுகையில் ” மக்கள் தங்கள் கடைசி நாட்களை கழிக்க பனாரஸ் செல்வது வழக்கம். அதைப்போல மோடி தனது கடைசி நாட்களை கழிக்க பனாரஸ் சென்றுள்ளார். அவர் ஒரு மாதங்கள் அங்கே இருக்கலாம். அல்லது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட அங்கே இருக்கலாம்” என விமர்சித்தார்.
இதற்க்கு பதிலடியாக பிஜேபி செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறுகையில் ” ஜின்னா வழி வந்தவர்கள் மனநிலை இப்படித்தான் இருக்கும். 135கோடி மக்களின் ஆசிர்வாதமும் நாங்கள் வணங்கும் விஸ்வநாத் பூரண அருளும் மோடிக்கு இருக்கிறது” என குறிப்பிட்டார். மேலும் சம்பித் பத்ரா கூறுகையில் ” இந்த நிகழ்வு அவுரங்கசீப்புகளை வெளிக்கொண்டுவந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.
அகிலேஷின் இந்த கண்ணியமற்ற விமர்சனத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் சிலர் கூறுகையில் பிரதமர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னிந்தியாவில் எம்பி கனிமொழி இதே போல பேசியதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறினர்.
….உங்கள் பீமா