Saturday, July 27, 2024
Home > அரசியல் > பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகியை அருவருக்கத்தக்க வகையில் பேசிய ஒவைசி..! ஆப்படித்த உத்திரபிரதேச அரசு..!!

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகியை அருவருக்கத்தக்க வகையில் பேசிய ஒவைசி..! ஆப்படித்த உத்திரபிரதேச அரசு..!!

உத்திரபிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து மாநில எதிர்க்கட்சிகள் இப்போதே களத்தில் குதித்துவிட்டன. மாயாவதி ஒருபுறம் பிராமணர்கள் மற்றும் தலித்துகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்திவருகிறார். மறுபுறம் அகிலேஷ் யாதவ் லெட்டர்பேட் கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் AMIIM கட்சி நிறுவனரான அசாதுதீன் ஒவைசி வரவிருக்கும் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியை களமிறக்குகிறார். இதற்காக உ.பி சென்ற அவர் பார்பங்கி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் பேசிய ஒவைசி “பார்பங்கியில் செயல்பட்டு வந்த பழமையான பள்ளிவாசலை நிர்வாகம் இடித்து தள்ளிவிட்டது. இதற்க்கு எதிராக எந்த ஒரு எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்கவில்லை. நமக்கு நாமே பாதுகாப்பு. முத்தலாக் விஷயத்தில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்திய பிஜேபி இந்துக்கள் விவகாரத்தில் ஒன்றும் சொல்ல மறுக்கிறது.

`

எங்கள் அண்ணியே குஜராத்தில் கைவிடப்பட்டு தனியாக வாழ்கிறார். அவருக்கு நீதி வேண்டும். இந்துக்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா” என மோடி அவர்களை குறிப்பிட்டு பேசினார். மேலும் முதல்வர் யோகியையும் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இந்துக்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களையும் கூறியதாக சொல்லப்படுகிறது.

கூட்டத்தில் கலந்து கொண்ட யாரும் முக கவசம் அணியவில்லை. தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. இதையடுத்து பார்பங்கி காவல்துறையினர் ஒவைசி மீது வழக்கு பதிந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பார்பங்கி எஸ்.பி யமுனா பிரசாத் “பார்பங்கியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் உரிய அனுமதி பெறாமலும் சட்டத்துக்கு புறம்பாகவும் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமலும் கட்டடப்பட்டிருக்கிறது.

```
```

பலவருடங்களாக நோட்டீஸ் அனுப்பியும் எச்சரித்தும் பயனில்லாமல் போகவே மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அந்த வளாகம் இடிக்கப்பட்டது. அந்த சம்பவத்தை வைத்து இருபிரிவினரிடையே கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் பேசிய ஒவைசி மீது இரண்டு வழக்குககள் பதியப்பட்டுள்ளது. கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் பேசுதல் மற்றும் பெருந்தொற்று சட்டத்தை மீறுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.” என கூறினார்.

…உங்கள் பீமா