3-3-22/11.57am
சென்னை : பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என அழைக்கப்பட்ட காலம் மாறி ஆர்.எஸ்.பி மீடியா என விமர்சனம் எழத்தொடங்கியிருக்கிறது. அதிலும் நக்கீரன் போன்ற பொறுப்புள்ள மூத்த பத்திரிக்கைகள் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு செய்தி பரவியபின்பு மேம்போக்காக மன்னிப்பு கேட்டுவிடுவதும் வாடிக்கையாக நடந்துவருகிறது.

இந்நிலையில் தன்னை உளவுப்புலி அரசியல் புலனாய்வு பத்திரிக்கையாளர் என கூறிக்கொள்ளும் சவுக்கு சங்கர் என்பவர் நெட்டிசன்கள் மத்தியில் சின்ன கோபால் என விமர்சிக்கப்படுகிறார். மொத்த தலைவர்கள் மற்றும் உயர்பதிவியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒருமையில் பேசுவதே அவரது பாணி. மேலும் இஸ்ரேல் மொஸாட் போல துப்பறிந்து கண்டுபிடித்ததை போல முகபாவனையை மாற்றிக்கொண்டு சீரியஸாக அவர் பேட்டி கொடுப்பது சிடுமூஞ்சியினரையும் குபீரென சிரிக்கவைக்கும்.
சமீபத்தில் பிஜேபி ஐடி விங்கை சேர்ந்த இருவருக்கு மாத சம்பளம் மூன்றுலட்ச ரூபாய் வழங்கப்படுகிறது என சிரிக்காமல் பேசியது திமுகவினரையே சிர்க்கவைத்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். நேற்று முன்தினம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ரங்கராஜ் பாண்டே அமைச்சரை தனியாக சந்தித்ததாக புலனாய்வுப்புலி ஒரு பதிவிட்டுள்ளார்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ரங்கராஜ்பாண்டே உள்ளிட்டோர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அண்ணாமலை மூத்த நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் யாரையும் மதிப்பதில்லையென்றும் புகார் அளித்ததாக புலனாய்வுப்புளி பதிவிட்டுள்ளார். தமிழக அரசியல் இனி வரும் காலங்களில் சவுக்கு சங்கர் அவர்களின் கையிலேயே இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக சவுக்கு ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா