Wednesday, May 20, 2026
Home > அரசியல் > தூஷ்ரா பந்து வீச்சாளரை தூக்கிய ஆம் ஆத்மீ..!

தூஷ்ரா பந்து வீச்சாளரை தூக்கிய ஆம் ஆத்மீ..!

17-3-22/13.32pm

பஞ்சாப் : நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றியை பெற்ற ஆம் ஆத்மீ பிஜேபி மற்றும் காங்கிரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திராவிட மாடல் இலவச அறிவிப்பு செல்வந்தர்களான சீக்கியர்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் பக்கமாக திருப்பியது.

பகவந்த்மான் முதலமைச்சராக்கப்பட்டார். விடுதலைப்போராட்ட வீரர் பகத்சிங் அவர்கள் மூதாதையர் கிராமமான காட்கர் கலனில் பதவியேற்புவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. பங்குபெற வரும் அனைத்து மக்களும் மஞ்சள் நிறதுண்டு அணிந்துவர அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். இதனிடையே கடந்த மார்ச் 10 அன்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

அதில் ” எனது நண்பர் பகவந்மான் முதல்வராக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் பகத்சிங் கிராமத்தில் பதவியேற்பு விழா நடப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே ஆம் ஆத்மீ தரப்பில் மூன்று ராஜ்யசபா சீட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில் ஹர்பஜன் பெயரையும் சேர்த்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெயர்பட்டியலில் ஹர்பஜனை சேர்த்து அப்பர் ஹவுஸிற்கு அனுப்பியுள்ளதாக ஆம் ஆத்மீ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் பதவியேற்புவிழாவின் போது முதல்வர் விளையாட்டுக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. இதுகுறித்து ஹர்பஜன் மறுப்பு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா