17-3-22/16.00pm
தட்சிணகன்னடா : கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள அரசு பெண்கள் கல்லூரியில் பயிலும் ஆறு மாணவிகள் திடீரென ஹிஜாப் அணிந்துவந்து சர்ச்சையை கிளப்பினர். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடை தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

மாணவிகள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகினர். அங்கு ஹோலி பண்டிகைக்கு பிறகு வழக்கு விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உடுப்பி கல்லூரி மேம்பாட்டுக்குழுவின் துணைத்தலைவராக உள்ள யாஷ்பால் சுவர்ணா பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்தார். சந்திப்பில் “கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்போம் என கூறிய அந்த 6 மாணவிகள் நமது நீதித்துறைக்கு களங்கத்தை உருவாக்கும் நோக்கில் அறிக்கையளித்துள்ளனர்.

நான் முன்பு கூறியது போல அவர்கள் மாணவிகள் அல்ல. பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். மூன்று நீதிபதிகளுக்கு எதிராக அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அவர்கள் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று மீண்டும் நிரூபித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அமைப்பு ஒன்று இங்கு வந்து மாணவிகளுக்கு ஊடகங்களில் எப்படி பேசவேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கிறது.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நாங்கள் தொடர்புடைய நிறுவனங்களை கோரியிருக்கிறோம். இதுபோல அறிக்கை வெளியிடுபவர்கள் இங்கு வாழவோ பணிசெய்யவோ அனுமதிக்க கூடாது. அவர்கள் தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க விரும்பும் நாட்டிற்கு செல்லவேண்டும். மற்ற ஏழை மாணவர்களை தொந்தரவு செய்ய கூடாது. கல்விக்கொள்கைகளை அழித்து மற்ற மாணவர்களை தொந்தரவு செய்வதே அவர்கள் நோக்கம்.

பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் முயற்சி செய்வோம். அவர்களின் நோக்கம் அதுவல்ல. அவர்கள் படிக்கவோ தேர்வெழுதவோ வேண்டும்” என தெரிவித்தார். மேலும் யஷ்பால் ஸ்வர்ணா பிஜேபி ஓபிசி மோர்ச்சா கர்நாடக மாநில பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
….உங்கள் பீமா
