04-02-2022/13.10pm
திருநெல்வேலி : பிஜேபி எம்.எல்.ஏ வின் காரில் இருந்த கட்சிக்கொடியை அகற்ற சொல்லி காவல்துறை வாக்குவாதம் செய்ததால் நெல்லையில் பரபரப்பு நிலவியது. பிஜேபி தொண்டர்கள் சூழ்ந்ததால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எம்.ஆர் காந்தி. இவர் நேற்று திருநெல்வேலிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது கார் நெல்லை கே.தி.சி நகர் அருகே சென்றபோது காவல்துறை வண்டியை நிறுத்தியது. அதன்பின்னர் வாகனத்தில் இருந்த கட்சிக்கொடியை அகற்ற சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த பிஜேபி தொண்டர்கள் அருகிலிருந்த திமுக கொடிகளை சுட்டிக்காட்டி ” அங்கே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திமுக கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அதை கழற்றுங்கள். நாங்கள் காரில் இருக்கும் கொடியை அகற்றுகிறோம்” என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர்.காந்தியை நடுரோட்டில் நிறுத்தி இப்படி வாக்குவாதம் செய்தது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
ஏற்கனவே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சொன்னதுபோல தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படுகிறதா என தமிழக மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். திமுக தனது சர்வாதிகாரப்போக்கை கைவிடவேண்டும் என பல நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா