Tuesday, June 17, 2025
Home > அரசியல் > பக்கா சாணக்யத்தனம்..! பதறும் காங்கிரஸ்..! பிஜேபிக்கு தாவிய முக்கிய தலைவர்

பக்கா சாணக்யத்தனம்..! பதறும் காங்கிரஸ்..! பிஜேபிக்கு தாவிய முக்கிய தலைவர்

27-1-22/14.05pm

டேராடூன் : ஐந்து மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மணிப்பூர், உத்தரகாண்ட், உத்திரபிரதேசம் கோவா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் வருகிற பிப்ரவரி மதம் தொடங்கி மார்ச் வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் சமாஜ்வாடி பிஜேபி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தலைவர்கள் அணிமாறி வருகின்றனர். உத்திரபிரதேசத்தில் மூன்று அமைச்சர்கள் உட்பட ஆறுபேர் பிஜேபியிலிருந்து வெளியேறிய நிலையில் காங்கிரஸ் மற்றும் மாற்று கட்சியிலிருந்து பெரிய தலைவர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிஜேபிக்கு தாவி வருகின்றனர்.

இதனிடையே முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் காங்கிரசிலிருந்து பிஜேபிக்கு தாவிய நிலையில் உத்திரகாண்ட் காங்கிரஸ் மாநில தலைவர் பிஜேபியில் இணைந்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் 70 தொகுதிகளை கொண்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 57 சீட்டுக்களும் காங்கிரஸ் 11 சீட்டுக்களும் சுயேச்சைகள் 2 சீட்டுக்களும் பெற்றிருந்தன.

`
prahalad joshi

இதனிடையே இந்த 2022தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவரான கிஷோர் உபத்யாயை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவிட்டது காங்கிரஸ் டெல்லி தலைமை. இதனிடையே இந்த மாத ஆரம்பத்தில் மத்திய அமைச்சரும் பிஜேபி தலைவருமான பிரகலாத் ஜோஷியை கிஷோர் சந்தித்தது பரபரப்பை கிளப்பியது. அதையடுத்து காங்கிரஸ் நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.

```
```
kishore upathyaya

இந்நிலையில் கிஷோர் இன்று அதிகாரபூர்வமாக பிஜேபியில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும் தொடர்ந்து இருமுறை வென்ற சட்டமன்ற தொகுதியான தெஹ்ரியிலேயே அவருக்கு சீட்டு வழங்கப்படும் என தெரிகிறது. காங்கிரசிலிருந்து தொடர்ந்து நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைவர்கள் வெளியேறிவருவது காங்கிரசுக்கு பலத்த சரிவை கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா