Friday, April 18, 2025
Home > அரசியல் > பிஜேபி தலைவர் அண்ணாமலை போராட்டம்..! எனக்கு 80 வயசாயிருச்சு துரைமுருகன் பேட்டி..!

பிஜேபி தலைவர் அண்ணாமலை போராட்டம்..! எனக்கு 80 வயசாயிருச்சு துரைமுருகன் பேட்டி..!

5-11-21 / 17.25pm

முல்லை பெரியாறு: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பிஜேபி தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள போராட்டத்தை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட சென்றுள்ளார்.

முல்லை பெரியாறு அணையை இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய சென்ற திமுக அமைச்சர் துரைமுருகன் முதல் நாள் ஆய்வை பிற்பகல் 3 மணிக்கே நிறைவு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களிடம் ” பேபி டேம் கட்டுவதற்கு தடையாக மூன்று மரங்கள் இருக்கின்றன. அதை அப்புறப்படுத்த கேரள அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

கேரள அரசுத்துறைகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன.ஆனால் பதில் கிடைக்கவில்லை.இதனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.” என கூறினார். மேலும் எனக்கு எண்பது வயதாகிவிட்டது. மூச்சு வாங்க அணையின் படிக்கட்டுகளில் ஏறியிருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

`

இந்த தள்ளாத வயதிலும் அமைச்சர் தன உடல்நலனை பேண ஓய்வெடுக்காமல் பம்பரமாய் சுற்றுகிறார் என திமுகவினர் புகழ்ந்து தள்ளுகின்றனர். இதுகுறித்து எதிர்க்கட்சியான பிஜேபி கூறுகையில் ” தலைவர் அண்ணாமலை முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என கூறியிருக்கிறார்.

இவ்வளவு நாள் செல்லாமல் தற்போது தலைவர் போராட்டம் அறிவித்தபின்னர் மிரண்டுபோய் ஆய்வுக்கு சென்றிருக்கின்றனர். அணை கட்ட மரம் தடை என கூறுவது அப்பட்டமான மழுப்பல். அதுவும் மூன்று மரமாம். இந்த கதையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.” என தெரிவிக்கின்றனர்.

```
```

…..உங்கள் பீமா

#pwd #minister #duraimurugan #mullaiperiyardam