04-02-2022/12.20PM
உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. உதிர்ப்பிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் வரை எழுகட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

பிஜேபி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்குமுனைப்போட்டி நிலவி வருகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவித்துவிட்ட நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தேர்தலில் போட்டியிடப்பபோவதில்லை என அறிவித்திருக்கிறார். மேலும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தயங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் களம்காண்கிறார். இவரை எதிர்த்து பீம் ஆர்மியை சேர்ந்த ராவண் என்பவர் போட்டியிடுகிறார். மேலும் இங்கு போட்டியிட இருந்த அகிலேஷ் யாதவின் வேட்பாளர் வேறு தொகுதிக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று கோரக்பூர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வேட்புமனு தாக்கல் செய்ய செல்கிறார்.
அவர் கோரக்பூரில் உள்ள பிரபலமான மஹாயோகி குரு ஸ்ரீ கோரக்நாத் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு தனது குருவான குரு மஹந்த் அவைத்யநாத் ஆசியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார். இந்த தொகுதியில் யோகிக்கு வெற்றி வாய்ப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
…..உங்கள் பீமா