Monday, June 16, 2025
Home > அரசியல் > திமுகவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..! ஒருவர் காயம்..!

திமுகவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..! ஒருவர் காயம்..!

04-02-2022/13.50pm

கடலூர் : திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது திமுக உறுப்பினர்களை மர்மநபர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 பிப்ரவரி அன்று தொடங்க இருக்கிறது. அதையொட்டி வேட்பாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. நாமக்கல் சேலம் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் மற்றும் விசிகவினர் திமுக மீதுள்ள அதிருப்தியால் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.

மேலும் தேர்தல் சீட்டு விவகாரத்தில் நேற்று திமுக பிரமுகர் ஒருவர் மடிப்பாக்கம் பகுதியில் வரத்து இல்லத்தில் வைத்தே கொல்லப்பட்டார். இந்நிலையில் கடலூர் தொகுதியில் பல இடங்களை கூட்டணிக்கட்சிக்கு தாரைவார்த்து விட்டதாக கூறி கடலூர் மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தின் முன் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

`

ஆர்ப்பாட்டத்தின் போது மர்மநபர்கள் திமுக தொண்டர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே காயம்பட்ட திமுக தொண்டர் குமார் என்பவர் கடலூர் மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் இன்று போராட்டம் நடத்தினார். மாவட்ட செயலாளர் ஐயப்பன் பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கூட்டணிக்கட்சிகளுக்கு சீட்டு வழங்கியதாக கோஷம் எழுப்பினார். காவல்துறையினர் விரைந்துவந்து குமாரை அப்புறப்படுத்தினர்.

```
```

ஏற்கனவே கவுன்சிலர் சீட்டை 24 லட்சத்திற்கு திமுக பிரமுகர் ஒருவர் விலை பேசியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

…..உங்கள் பீமா