25-2-22/13.41pm
புதுடில்லி : மேற்குவங்க பிஜேபி தலைவர்கள் தொடுத்த வழக்கை சற்றுமுன்னர் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் மாநகராட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 12 ல் முடிந்த நிலையில் வருகிற 27ம் தேதி தேர்தல் 108 நகராட்சிகளில் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் அதிகம் போடப்பட்டதாக பல வீடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில் பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் வாக்குச்செலுத்த வந்தது அனைவரயும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.
இதனிடையே கடந்த 12ம் தேதி நடந்த தேர்தலில் அதிக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும் மாநில தேர்தல் ஆணையம் திரிணாமூல் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் காங்கிரஸ் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சுமத்தி வந்தன. இதனிடையே பிஜேபி மாநில மூத்த தலைவர்களான மௌசுமி ராய் மற்றும் பிரதீப் பானெர்ஜீ ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர்.
அதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற வன்முறை மற்றும் கள்ள ஒட்டு ஆகியற்றை கருத்தில் கொண்டும் ராணுவ துணைப்படையை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு இறக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதி சந்த்ர சூட் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மேற்குவங்க உயர்நீதி மன்றத்தில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையம் உள்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கு கடந்த டிசம்பர் 19ல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாநில தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையர் சமீபத்தில் திமுக எழுதிக்கொடுத்ததை வாசித்தது போல திரிணாமூல் காங்கிரசுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது என தொடர்ந்து பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
…….உங்கள் பீமா