24-1-22/11.50am
கேரளா: கேரளமாநிலம் பழியோடம் பகுதியில் அமைந்துள்ளது நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியபிறகு செண்டுமேழம் முழங்க யானைகளை நடக்கவிட்டு அணிவகுப்பு நடத்துவார்கள். இதற்க்கு கட்டணமாக திருக்கோவில் நிர்வாகம் 9000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்திருக்கிறது.
தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தவரை தனது தனயனான முக ஸ்டாலின் அவர்களை பொறுப்பேற்க விடவில்லை. இளைஞரணி தலைவர் துணை முதல்வர் என பொறுப்பான பதவிகளிலேயே நியமித்திருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை திமுக எதிர்கட்சியாகவே செயல்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது.
காலம் மாறியது. டிடிவி தினகரன் அதிமுக கட்சியை உடைத்ததோடு மட்டுமல்லாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக பிரித்தார். அதனால் திமுக ஆட்சியை பிடிக்க எளிதாகியது. மேலும் அண்ணியார் துர்கா ஸ்டாலின் அவர்கள் வேண்டுதல் கேரளா காசி ராமேஸ்வரம் என பட்டியல் நீண்டிருந்தது.
மேலும் முதல்வரின் ஆயுட்காலம் நீடிக்க வேண்டியும் முதல்வர் பதவி கிடைக்க வேண்டியும் துர்கா ஸ்டாலின் அவர்கள் பல பிரகாரங்களை செய்தார். ஒருபுறம் பிரசாந்த் கிசோர் கைகொடுக்க மறுபுறம் அண்ணியாரின் பக்தி கைகொடுக்க முதல்வராக அரியாசனத்தில் அமர்ந்தார் முக ஸ்டாலின்.
இந்நிலையில் முக ஸ்டாலின் சார்பாக கேரளா கோவிலில் யானை அணிவகுப்பு நடத்த முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சென்று 9000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
வருகிற 30 ஜனவரியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. மேலும் கோவில் அறிவிப்பு பலகையில் முக ஸ்டாலின் அவர்களின் பெயர் ஆறாவது ஆளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் கோவில்களை இடித்தாலும் இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மறுத்தாலும் அவர் ஒரு தீவிர இந்து உணர்வாளரே என இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.
மேலும் விபூதியை இட்டுக்கொள்ள மறுத்தாலும் அவர் கோவில்களுக்கு செல்ல தவறுவதில்லை எனவும் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு தீவிர முருக பக்தர் எனவும் இந்து அமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா
cartoon courtesy:: j.jegan kanniyakumari