Saturday, October 5, 2024
Home > செய்திகள் > உ.பியில் பரபரப்பு..! அயோத்தி தொகுதி எம்.எல்.ஏ வுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை..?

உ.பியில் பரபரப்பு..! அயோத்தி தொகுதி எம்.எல்.ஏ வுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை..?

18-12-21/11.43am

உத்திரபிரதேசம் : நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் போலியான மார்க்சீட்டுகளை கொடுத்த வழக்கில் ஐந்துவருட சிறைத்தண்டனை அளித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது உத்திரபிரதேச அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் கோஸைகஞ் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இந்திர பிரதாப் என்கிற கப்பு திவாரி. இவர் 1992ல் சாகேத் கல்லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பதி ராமஜென்ம பூமி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் “இந்திர பிரதாப் பிஎஸ்சி பார்ட் 2 ல் தோல்வியடைந்துவிட்டார். இருந்த போதிலும் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பிஎஸ்சி பார்ட் 3ல் இணைந்துவிட்டார்.

`

அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது பைசாபாத் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 27 வருடங்களாக விசாரணையில் இருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளிவந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூஜா சிங் தனது தீர்ப்பில் குற்றவாளிக்கு 19000 ரூபாய் அபராதமும் ஐந்து வருட சிறை தண்டனையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

```
```

வழக்கு தொடுத்த முதல்வர் சில வருடங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார் என கூறப்படுகிறது. மேலும் இந்திர பிரதாப் வழக்கு விஷயமாக முதல்வர் யோகியை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக எந்த ஒரு உதவியும் செய்ய மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நேர்மையான அரசு என பெயர் வாங்கிய யோகி அரசை மக்கள் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். மேலும் இந்திரபிரதாப் பிஜேபி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்பது கூடுதல் தகவல்.

….உங்கள் பீமா