Saturday, July 27, 2024
Home > அரசியல் > உத்திரபிரதேசம் : பாஜக வேட்பாளர் மீது வழக்கு..!

உத்திரபிரதேசம் : பாஜக வேட்பாளர் மீது வழக்கு..!

24-1-22/13.25pm

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச மாநிலம் மீரான்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமான முடிவை வெளியிட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு வேறு வியூகம் அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கிட்டத்தட்ட ஒயிட் வாஷ் ஆகிவிடும் என சொல்லப்படும் நிலையில் ப்ரியங்கா காந்திக்கும் பகுஜன் சமாஜ் மாயாவதிக்கும் வார்த்தைப்போர் முற்றி வருகிறது.

இந்நிலையில் மீரான்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான பெர்சாந்த் குஜ்ஜார் சோரவாலா கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் ” சமாஜ்வாடி இஸ்லாமியர்களுக்கான கட்சி. பிஜேபி இந்துக்களுக்கான கட்சி. ஆகையால் பிஜேபிக்கு வாக்களியுங்கள்” என கூறியதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

`

அதையடுத்து காக்ரோலி SHO சுனில்ஷர்மா கூறுகையில் ” தேர்தல் போயிரச்சார கூட்டம் மாவட்ட அதிகாரிகள் அனுமதியின்றி நடத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி இந்த பேரிடர் காலத்தில் கூட்டம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது விதிகளுக்கு முரணாக உள்ளது. இதனால் குஜ்ஜார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 125, தொற்றுநோய் சட்டப்பிரிவு 3 மற்றும் பேரிடர்மேலாண்மை சட்டப்பிரிவு 51ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

```
```

மீரான்பூரில் வருகிற 10 பிப்ரவரியில் முதற்கட்ட தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமாஜ்வாடி அகிலேஷ் ஒரு கூட்டத்தில் பேசுகையில் இது இஸ்லாமியர்களுக்கான கட்சி என தமிழக முதல்வர் கிறித்தவர்களிடையே உரையாற்றும்போது இது கிறித்தவர்களுக்கான கட்சி என கூறியதைப்போல குறிப்பிட்டிருந்தார். அதையே குஜ்ஜார் தனது உரையில் குறிப்பிட்டிருப்பதாக குஜ்ஜார் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா